நம் முன்னோர்கள் நாகரீகத்தின் முதல் வளர்ச்சி கட்டத்தில் இருக்கும் போது ஐந்திணை என சொல்லப்படும் ஐந்து வகை நிலங்களின் அடிப்படையில் தொழில் செய்து தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர். அந்தவகையில், ஐந்து திணைகளில் ஒன்றான முல்லை நிலத்தில் விவசாய தொழில் நடத்தப்பட்டு வந்தது. விவசாய நிலத்தை உழுவதற்கு பெரிதும் பயனுள்ளதாக காளைகள் இருந்தன.
எனவே முல்லை நில மக்களின் வீட்டில் செல்லப்பிராணியாக காளைகள் வளர்க்கப்பட்டு வந்தன. இப்படி வீட்டில் வளர்க்கப்படும் காளைகளை வேட்டைக்கு அழைத்துச் செல்வதும், அதனுடன் விளையாடுவதும் வழக்கமாக இருந்தது அதேபோல்; முல்லை நிலப்பெண்கள் காளையை அடக்கும் ஆண்மகனையே தங்களது கணவனாக தேர்ந்தெடுப்பது வழக்கமாக இருந்தது. இந்த விளையாட்டு தான் பிற்காலத்தில் ஏறுதழுவுதல் என்றானது.