Categories
தேசிய செய்திகள்

“திருமணம் செய்ய மறுப்பு”… கணவனைக் கொன்றுவிட்டு… மாமியாருக்கே போன் செய்து கூறிய மருமகள்..!!

ஊரறிய திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்ளாததால் கணவனை கொலை செய்துவிட்டு மாமியாருக்கு போன் செய்து கூறியுள்ளார் மருமகள்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மலக்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பவானி என்பவர், தாலப்புடி கிராமத்தை சேர்ந்த தாத்தாஜி என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பின்னர் பவானி ஒரு மாதத்திற்கு முன்பாக ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். ஊரறிய திருமணம் செய்து கொள்ள பவானி வற்புறுத்தியபோது அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று இருவரும் இருசக்கர வாகனங்களில் பல இடங்களுக்கு சென்று விட்டு பவானி அவர் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.

அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் பவானி தாத்தாஜி குத்தியுள்ளார். தாதாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து பவானி தான் உங்களது மகனை கொன்று விட்டதாக மாமியார் இடமே போன் செய்து கூறியுள்ளார். இதை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர. மேலும் வழக்குப்பதிவு செய்து பவானியை கைது செய்தனர்.

Categories

Tech |