ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் செயலிகளால் ஏராளமான பிரச்சினைகளை சமீபத்தில் தமிழக மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்த செயலிகளால் தமிழகத்தில் சிலர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். இதனை அனைத்தையும் கருத்தில் கொண்டு, ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் செயலிகள் மூலம் வரக்கூடிய பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழக காவல்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து மக்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர். அந்த வகையில் கடன் செயலிகள் மூலம் மோசடிகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக எப்படி கடன் பெறலாம் என்பது குறித்து வங்கி அதிகாரிகள் ஆலோசனை தருகின்றனர். இதன்படி,
வீட்டில் உள்ள நகைகளை வைத்து கடன் பெறலாம். இதற்கான வட்டி விகிதம் குறைவு.
உறவினர் நண்பர்களிடம் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கலாம்.
வங்கியில் தனிநபர் கடன் பெறலாம் அல்லது சொத்து ஆவணங்களை வைத்து கடன் பெறலாம்.
தேவையைப் பொறுத்து கிரெடிட் கார்டு கடனை பரிசளிக்கலாம்.