ஜல்லிக்கட்டை எதற்காக கொண்டாடுகிறார்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைப் பார்க்க காங்கிரஸ் கட்சி எண் எம்பி ராகுல் காந்தி அவர்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார் அங்கு அவரை வரவேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் எம்பிக்கள் ராகுலை காரில் அவனியாபுரத்திற்கு அழைத்து சென்றனர்.
மதியம் 12 மணி அளவில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு ராகுல் காந்தி வந்த நிலையில் ஏற்கனவே அங்கு இருந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியுடன் அமர்ந்து ஜல்லிக்கட்டை ரசிக்க தொடங்கினார். பின் ராகுல் பேட்டி அளிக்கையில் எதற்காக ஜல்லிக்கட்டை இந்த அளவிற்கு தமிழர்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை நான் இன்று அறிந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.