Categories
தேசிய செய்திகள்

சென்னை ஏர்போர்ட்டுக்கு குட் நியூஸ்… புதிய முனையங்கள் வர உள்ளது… இந்திய விமான நிலைய ஆணையம் தகவல்..!!

சென்னை விமான நிலையத்தில் புதிய முனையங்கள் 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னையின் மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்களை இணைக்கும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு புதிய முனையத்தை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. தற்போது சென்னை விமான நிலையத்தில் உள்ள இரண்டு மற்றும் மூன்றாவது முனையத்தை எடுத்துவிட்டு 2 லட்சத்து 18 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய முனையம் அமைக்கப்பட உள்ளது. புதிய முனையம் 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என இந்திய விமான நிலைய ஆணையம் தற்போது தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய முனையம் அமைக்கும் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் எனவும், முதல் கட்டத்தில் 2 வது முனையத்தை இடித்துவிட்டு அங்கு புதிய முனையம் அமைக்கப்படும் எனவும் வரும் ஜூன் மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டத்தில் 3வது முனையம் இடிக்கப்பட்டு அதில் புதுமனையம் கட்டப்பட்டு அது ஒருங்கிணைந்த புதிய முனையமாக 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய திட்டம் தற்போது சென்னை விமான நிலையத்தின் திறனை ஆண்டுக்கு 2 கோடியே 10 லட்சம் பயணிகளிடமிருந்து 3 கோடியே 50 லட்சம் பயணிகள் ஆக உயர்த்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |