Categories
சினிமா தமிழ் சினிமா

‘தல’-க்கு வயது 20… அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்… ட்ரெண்டிங்கில் ’20YearsOfThala’…!!!

தமிழகத்தில் அனைவராலும் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித் குமார் பற்றிய ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தமிழகத்தில் உள்ள நடிகர்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தில் அனைவராலும் ‘தல’ கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித்குமார். அவருக்கு தல என்ற அடைமொழி தீனா திரைப்படத்தின் மூலமே அறிமுகமானது. அதன்பிறகு அனைவராலும் தல என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

அவர் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு சிலரும் சமூகத் தொண்டுகள் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இன்றோடு தீனா திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இதனை அடுத்து “20 years of Thala” என்ற ஹேஸ்டேக் பதிவு செய்து அவரது ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

Categories

Tech |