தாமிரபரணி தண்ணீர் கடலில் கலக்கும் இடமான முக்காணி ஆற்றுப்பாலத்தில் தடையாக இருந்த அமலைச் செடிகளை ஆட்சியர் அப்புறப்படுத்த செய்தார்.
தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருவதினாலும், அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதாலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆறு கடலில் கடக்கும் இடமான ஆத்தூர் பகுதியில் முக்கானி ஆற்றுப்பாலத்தில் தண்ணீர் செல்லும் பாதையை அமலைச் செடிகள் தடுத்துக் கொண்டிருந்தன. இந்த தகவலை அறிந்தவுடன் ஆட்சியர் செந்தில்குமார் அப்பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தார்.
ஆத்தூர் நகர பஞ்சாயத்து மூலம் பாலத்தின் கீழ் அடைத்துக் கொண்டிருந்த அமலைச் செடிகள் அகற்றும் பணி ஆட்சியர் முன்னிலையில் நடந்தது. அமலைச் செடிகள் முழுமையாக அகற்றப்பட்ட பின்னர் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடமான புன்னக்காயல் முகத்துவாரத்தை அவர் பார்வையிட்டார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித் துறையினரிடம் 24 மணி நேரமும் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட ஆட்சியர் உத்தரவிட்டார்.