Categories
உலக செய்திகள்

ட்ரம்பை பதவியை விட்டு நீக்க வேண்டாம்…. நாட்டிற்கு ஏற்றது அல்ல…. துணை அதிபர் கருத்து….!!

அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டாம் என துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்ற நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. அந்த சமயத்தில் டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் காவல்துறை அதிகாரி உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்ட டொனால்ட் ட்ரம்பை பதவியில் இருந்து நீக்கக்கோரி அந்நாட்டு சபாநாயகர் நான்சி பெலோசி துணை அதிபர் மைக் பென்ஸை வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து மைக் பென்ஸ் நான்சிக்கு எழுதியுள்ள கடிதத்தில் “அமெரிக்க அரசியல் அமைப்பின்  25வது சட்டதிருத்தம் என்பது அபகரித்தலுக்காகவோ அல்லது தண்டனை அளிப்பதற்காகவோ இல்லை. ஒருவர் அதிபராக தன் வேலையை சிறப்பாக செய்ய முடியாவிட்டால் அந்த நபரை பதவியிலிருந்து நீக்கும் வகையிலேயே” இந்த சட்டம் அமைக்கப்பட்டது.

மேலும் கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் ஜனவரி மாதம் நடந்த துயர சம்பவம் மத்தியில் அமெரிக்க மக்கள் அனைவரும் ஒன்றிணையும் நேரத்தில் மக்களைப் பிளவுபடுத்த வேண்டாம். ஆட்சி மாற்றம் அமைதியான முறையில் நிகழ வேண்டும். டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்காலம் இன்னும் 8 நாட்களில் முடிவடையும் நிலையில் 25 ஆவது சட்ட திருத்தத்தை பயன்படுத்தி டிரம்பை பதவியிலிருந்து நீக்க வேண்டாம். இந்த செயல் நமது நாட்டிற்கு மற்றும் அரசியலமைப்பிற்கு ஏற்றதாக இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |