வள்ளி திருமண நாடகத்தில் வள்ளியின் தந்தை நம்பிராஜன் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்திய எம்.எல்.ஏ சக்திவேல் அவர்களை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள நாடக பேராசிரியரான சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய வள்ளி திருமணம் என்ற புராண நாடகம் நடத்தப்பட்டது. இதில் சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்க பொருளாளர், சேலம் தெற்கு எம்.எல்.ஏவு.மான ஏ.பி.சக்திவேல் அவர்கள் வள்ளியின் தந்தை நம்பிராஜன் கதாபாத்திரத்தில் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த நாடகத்தில் நாடக நடிகர் சங்க உறுப்பினர்கள் பலர் இணைந்து நடித்தனர்.
இதனைப்பற்றி எம்.எல்.ஏ சக்திவேல் அவர்கள் கூறும்போது நாடகங்களில் நடிப்பதை சிறுவயதிலிருந்து விருப்பமாக கொண்டு இதுவரை 150க்கும் மேற்பட்ட மேடைகளில் நடித்துள்ளதாக கூறியுள்ளார். இதனையடுத்து வீர அபிமன்யு நாடகத்தில் பீமசேனன் வேடத்திலும், சித்திரவள்ளி நாடகத்தில் டெல்லி பாதுஷாவின் வேடத்திலும், கர்ணனும், கண்ணனும் என்ற நாடகத்தில் மற்றும் சமூக நாடகங்களிலும் சிவபெருமான் வேடம் போன்ற பல முக்கிய வேடங்களில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார், அதோடு உலக நாடக தினமாக சங்கரதாஸ் சுவாமிகள் குரு பூஜை நாளை உலக நாடக தினமாக தமிழக அரசு அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் நாடக நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகையை இரண்டாயிரத்தில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அனைத்து நாடக நடிகர்களுக்கு இ,எஸ்.ஐ மருத்துவ வசதி செய்தும், பஸ்பாஸ் வழங்கியும் உதவ வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த தூத்துக்குடி மாவட்டத்தில் வெண்கல சிலை உடன் மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.