Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சொந்த வேலையாக வெளியில் சென்றவர்… திடீரென நடந்த விபரீதம்… அதிர்ச்சியில் மனைவி…!!

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது சரக்கு வாகனம் மோதியதில் வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை-மணப்பாறை நெடுஞ்சாலையில் நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் ராமசாமி என்பவர் தனது சொந்த வேலை காரணமாக மணப்பாறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு பின்னால் வந்த சரக்கு வாகனம் ராமசாமியின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டது. இதில் படுகாயமடைந்த ராமசாமியை 108 ஆம்புலன்ஸ் மூலம் அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் ராமசாமி பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து ராமசாமியின் மனைவி ஐஸ்வர்யா தோகைமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |