Categories
சினிமா தமிழ் சினிமா

‘பொன்னியின் செல்வன் ‘… முதல் நாள் முதல் காட்சி ஐஸ்வர்யாராயுடன் நடித்தேன்… பிரபல நடிகர் வெளியிட்ட பதிவு…!!!

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியில்  ஐஸ்வர்யாராயுடன் நடித்ததாக பிரபல நடிகர் பதிவிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ . நீண்ட நாட்களுக்கு பின் ஹைதராபாத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ராமோஜி பிலிம் சிட்டியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி ,ஐஸ்வர்யாராய் ,சரத்குமார், ஐஸ்வர்ய லட்சுமி போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் முதல் நாள் முதல் காட்சியில் ஐஸ்வர்யாராயுடன் நடித்ததாக பிரபல நடிகர் ரகுமான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் படக்குழுவினரின் வேண்டுகோளுக்கிணங்க புகைப்படங்களை பகிர முடியாதது வருத்தமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |