நடிகர் சிம்புவின் ‘பத்துதல’ படத்தில் மூன்றாவதாக ஒரு நடிகர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் நாளை ஈஸ்வரன் திரைப்படம் மிக பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இதையடுத்து சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது . இந்த படம் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற முப்தி என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும் . இயக்குனர் கிருஷ்ணா இயக்கவுள்ள இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து இளம் நடிகர் கௌதம் கார்த்திக் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது மூன்றாவதாக இன்னொரு ஹீரோ இந்த படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .
Welcoming darling @KalaiActor as #Ameer on board for #PathuThala. Watch out for more update #PathuThala@kegvraja @NehaGnanavel @nameis_krishna @SilambarasanTR_ @Gautham_Karthik @priya_Bshankar @poetmanush @Iamteejaymelody @DoneChannel1 pic.twitter.com/18SEtTLhSF
— Studio Green (@StudioGreen2) January 13, 2021
அட்டக்கத்தி, மெட்ராஸ் ,கபாலி ,அதே கண்கள், காலக்கூத்து ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்திய கலையரசன் ‘பத்து தல’ படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் அமீர் என குறிப்பிடப்பட்டுள்ளது . ஏற்கனவே இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் அசுரன் பட பிரபலம் டிஜே அருணாச்சலம் ஆகியோர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது கலையரசனும் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.