Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு 50,000 முன்பணம்… தமிழக அரசுக்கு கோரிக்கை…!!!

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு 50 ஆயிரம் முன்பணமாக தரவேண்டும் என கல்வி நிறுவனங்களின் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனால்  பொங்கலுக்கு பிறகு ஜனவரி 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் ஊதியமின்றி தவிக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு 50 ஆயிரம் முன்பணமாக தரவேண்டும் என்று கல்வி நிறுவனங்களில் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. தனியார் பள்ளிகளில் 15 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கு மாதங்களுக்கு 5 ஆயிரம் என கணக்கிட்டு 10 மாதங்களுக்கு 50,000 முன்பணமாக தரவேண்டும். இதனை மூன்று ஆண்டு தவணையில் வசூலித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளது.

Categories

Tech |