தெலுங்கானாவை சேர்ந்த ஒரு விவசாயி புதுவிதமான அரிசியை கண்டுபிடித்துள்ளார். இந்த அரிசியை சமைக்க தேவையில்லை ஊற வைத்து அப்படியே சாப்பிடலாம்.
தெலுங்கானாவில் உள்ள கரிம்நகர் மாவட்டத்தில் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற ஒரு விவசாயி மேஜிக் அரிசியை பயிரிட்டு வருகிறார். பல்கலைக்கழக வேளாண்மை துறை உதவியுடன் இந்த அரிசியை பயிரிடுவதாக அவர் கூறியுள்ளார். இந்த அரிசி அசாமின் பல பகுதிகளில், மலைப் பகுதிகளில் வளர்க்கப்படும் ஒரு நெல் வகை. தனது முயற்சியால் இந்த அரிசியை தனது பண்ணையின் ஒரு சிறிய நிலத்தில் சாகுபடி செய்துள்ளார். சுமார் 5 மூட்டை விளைச்சலை எதிர்பார்த்து இருக்கிறார். இதன் பயிர் காலம் 145 நாட்கள். இப்போது வெட்ட உள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது:” வேளாண்மையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தவே இதை செய்தேன். ஒரு நிதி கோணத்தில் பார்க்க விரும்பவில்லை. அதை வளர்க்க விரும்பினேன். விளைச்சலை நான் பயன்படுத்துவேன் என்று அவர் கூறியுள்ளார். ஒரு முறை நான் அதை வெட்டி பரிசோதித்தேன் .முழுமையாக ஊறவைக்க அரைமணிநேரம் ஆனது. ஆனால் குளிர்ந்த நீரை பயன்படுத்தினால், சூடான நீரை பயன்படுத்தினால் அரிசி குளிர்ச்சியாகவும், சூடாகவும் இருக்கும். இதனுடன் நான் வெல்லம், வாழைப்பழம் மற்றும் தயிர் ஆகியவற்றை முயற்சித்தேன் இது மிகவும் சுவையாக இருக்கிறது ஊறவைத்த பிறகு சாதம் போல் தெரிகிறது” என தெரிவித்தார்.