விவசாய நிலத்திற்கு வெளிச்சம் வேண்டி மின்கம்பத்தில் ஏறிய மாணவன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள செம்பேடு என்ற கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜனார்த்தனன் என்ற மகன் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தனது வீட்டிலேயே இருந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் பல்ப் பொருத்துவதற்காக ஏறியுள்ளார். அப்போது திடீரென இவரின் மீது மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்துவிட்டார்.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் ஜனார்த்தனன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.