Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸுக்கு சுரேஷ் தாத்தா வருவாரா? மாட்டாரா ?… ட்விட்டரில் அவரே வெளியிட்ட பதிவு…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவது குறித்து சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் .

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆறு பேர் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் . தற்போது மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளனர் ‌ . கிட்டத்தட்ட 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ள நிலையில் அனிதா ,சிவானி , சுரேஷ் ஆகியோர் இன்னும் வரவில்லை. நேற்று இது குறித்து சுரேஷ் போட்ட பதிவில் பிக்பாஸிலிருந்து இன்னும் தனக்கு அழைப்பு வரவில்லை என தெரிவித்திருந்தார்.

இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் இருந்தனர். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸிலிருந்து தனக்கு அழைப்பு வந்துவிட்டது போல சுரேஷ் பதிவிட்டுள்ளார். இதனால் நாளை அவர் பிக்பாஸ் வீட்டிற்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து பலரும் ஆரிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு சுரேஷ்ஷிடம்  கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Categories

Tech |