தன்னுடைய அப்பா கடையில் கறி வெட்டி கொடுத்துக் கொண்டு MSC படித்து வரும் மாணவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய காலத்தில் அதிகளவிலான மாணவர்கள் கல்லூரி மற்றும் பள்ளி செலவை தாங்களாகவே பகுதி நேர வேலை செய்து சம்பாதித்து பார்த்து கொள்கின்றனர். இதில் மாணவிகளும் தங்களால் முடிந்த வேலைக்கு சென்று படிப்பு செலவுகளில் பெற்றோர்களின் சிரமத்தை போக்குகின்றனர். அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி கலக்கி வருகின்றார் ஒரு மாணவி.
திருப்பூர் மாவட்டத்தின் L.R.G அரசு பெண்கள் கல்லூரியில் M.S.C வேதியல் முதலாண்டு படிக்கும் சண்முகப்ரியா என்ற மாணவிதான் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகின்றார். இவரின் அப்பா கொங்கணகிரி பகுதியில் கறிக்கடை நடத்தி வருகின்றார். இதில் அப்பாவுக்கு உதவியாக தானும் கறி கடையில் கறி வெட்டிக்கொடுத்துக் கொண்டே, படிப்பையும் கவனித்து வருகின்றார்.இவரின் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.