முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி நல்ல வெற்றியை பெற்றது. 22 சட்டசபை இடைதேர்தலில் திமுக 13 இடங்களிலும் , அதிமுக 09 இடங்களிலும் வென்றது. அதே போல மக்களவையில் ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக கூட்டணியும் , 37 இடங்களில் திமுக கூட்டணி அசுர வெற்றி பெற்றது. சட்டமன்ற தேர்தல் வெற்றியால் அதிமுக தனது ஆட்சியை எவ்வித பாதகம் இல்லாதவாறு தப்பித்துக் கொண்டது.
இந்நிலையில் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் முடிந்த மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்தும், வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகின்றது.