அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டன் டிசியில் அவசர நிலை பிரகடனம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபராக பதவியேற்க உள்ளனர்.
முன்னதாக கடந்த நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த வெற்றியை ஏற்க மறுத்தார். மேலும் அவர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.
இந்நிலையில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பெற்ற வெற்றியை ஆதரித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் சான்றிதழ் வழங்கப்பட்டதை அடுத்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டதில் காவல் துறை அலுவலர் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதால் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தற்போதைய அதிபர் அறிவித்துள்ளார்.