Categories
உலக செய்திகள்

மக்களுக்கு நம்பிக்கை வரட்டு…! எனக்கு ஊசி போடுங்க டாக்டர்… ஜோ பைடன் எடுத்த முடிவு ..!!

அமெரிக்காவில், கொரோனா தடுப்பூசிகான இரண்டாவது டோசை ஜோ பைடன் எடுத்துக்கொண்டார்.

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தல் ஜோ பைடன் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டு அடுத்த வாரம் பதவி ஏற்க உள்ளார்.கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் உள்ள கிறிஸ்டியானா கேர் மருத்துவமனையில் கடந்த 21ஆம் தேதி ஜோ பைடன் கொரொனா தடுப்பூசிகாண பைசர் மருந்தின் முதல் டோசை எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் நேற்று கோரனா தடுப்பூசி காண பைசர் மருந்தின் இரண்டாவது டோஸை ஜோ பைடன் எடுத்துக் கொண்டார்.

Categories

Tech |