நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் தயாராகியுள்ள பூமி படத்தின் உணர்ச்சிகரமான முக்கிய காட்சி வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் பூமி திரைப்படம் தயாராகியுள்ளது. இது ஜெயம் ரவியின் 25வது திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார் . டி இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான பூமி படத்தின் டிரைலரும் ரசிகர்களை கவர்ந்தது . இந்த படம் தயாராகி கடந்த வருடம் மே மாதம் வெளியாக இருந்தது.
#BhoomiSneakPeek !!!
This is for our farmers 💪👉https://t.co/bXgEwk4eDl#Bhoomi from #Pongal Streaming on @DisneyplusHSVIP from January 14!
#BhoomiIn3Days@immancomposer @dirlakshman @AgerwalNidhhi @sujataa_HMM @shiyamjack @onlynikil @theHMMofficial pic.twitter.com/P49zfLeSY5— Jayam Ravi (@actor_jayamravi) January 11, 2021
ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. தற்போதுஇந்த படம் வருகிற ஜனவரி 14ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இந்நிலையில் ‘பூமி’ படத்தின் உணர்ச்சிகரமான முக்கிய காட்சி ஒன்று வெளியாகியுள்ளது . ரசிகர்களை கவர்ந்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .