Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மக்களுக்கு 200 ரூபாயில்… அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான ஒரு டோஸ் விலை ரூபாய் 200 க்கு கிடைக்கும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் குறைவான தடுப்பூசிகான ஒரு டோஸ் விலை 200 ரூபாய்க்கு கிடைக்கும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. சீரம் நிறுவனத்திடம் முதல் கட்டமாக ஒரு கோடி தடுப்பூசி கொள்முதல் செய்ய மத்திய அரசு ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், கோவிஷில்டு மருந்துகளை அனுப்பும் பணி இன்று முதல் தொடங்கும் எனவும் கூறியுள்ளது.

Categories

Tech |