பொங்கல் பரிசை ஜனவரி-25 வரை வாங்கிக்கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பண்டிகையையொட்டி மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்கப்படும் என்று தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார்.. இதையடுத்து பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது மக்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு கொடுத்து முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது.
மேலும் இந்த தேதியில் பொங்கல் பரிசு வாங்காதவர்கள் வரும் 16ம் தேதி வாங்கி கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. இதையடுத்து மக்கள் யாருமே பொங்கல் பரிசு வாங்காமல் இருக்க கூடாது. மக்கள் பொங்கல் பரிசு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தற்போது ஜனவரி 25 வரை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.