கொரோனா தடுப்பு ஊசி மருந்தான கோவாக்சினை சத்தீஸ்கர் மாநிலத்தில் பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வருகின்ற 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தொடங்குகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே அனைத்து மாநிலங்களிலும் இந்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு போடுவதற்கான தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்துள்ளது. இந்நிலையில் இந்த தடுப்பூசியை சத்தீஸ்கர் மாநிலத்தில் பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அம்மாநில சுகாதார மந்திரி டி.எஸ். சிங் டியோ கூறும்போது கொரோனா தடுப்பூசியான இந்த கோவாக்சின் மருந்தின் சோதனை முழுமையாக இன்னும் முடிவடையவில்லை.அந்த மருந்திற்கான மூன்றாவது கட்ட பரிசோதனைகள் முடிந்து அதன் திறன் பற்றிய அனைத்து விவரங்களையும் வெளியிட்ட பின்பு தான் இந்த மருந்தின் சோதனை முழுமையடையும். ஆனால் இந்த தடுப்பூசிக்கு மூன்றாவது கட்ட பரிசோதனை நடத்துவதற்கு முன்பே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே இதனை சத்தீஸ்கர் மாநிலத்தில் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது என கூறியுள்ளார்.
அதோடு ஒரு மருந்தின் இறுதி சோதனை முடிவதற்கு முன் அதற்கு அனுமதி கொடுத்தால் மற்ற நிறுவனங்களும் அதன் போலவே இறுதி கட்ட சோதனை முடிவதற்குள் அனுமதி கேட்டு நிற்கும் நிலை ஏற்பட்டுவிடும். இந்நிலையில் கோவத்தின் தடுப்பூசிக்கு முதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்த சத்தீஸ்கர் மாநிலம் ஆகும். அதோடு அதன் போட்டி நிறுவனமான சீரம் இந்த மருந்தின் திறன் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் ஒரு மாநில அரசே இந்த மருந்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.