Categories
மாநில செய்திகள்

மாஸ்டர் படம் ரசிகர்கள்…! தியேட்டரே முழு பொறுப்பு…! ஐகோர்ட் கிளை முக்கிய உத்தரவு ..!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு  மட்டும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் திரைப்படத்தை வெளியிட தமிழ்நாடு அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போனிபாஸ், முத்துக்குமார், ராம்குமார் ஆகியோர் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் – ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் உத்தரவின்படி திரையரங்குகள் 50 சதவீத இரு கைகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதனை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், திரையரங்கத்திற்கு வரும் ரசிகர்களுக்கு திரையரங்க உரிமையாளர்களை போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், ரசிகர்களின் வருகைக்கு ஏற்ப காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், கட்டண உயர்வு சம்பந்தமாக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம் 100 சதவீத இரு கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் தற்போது 50%  இருக்கைகளுக்கு மட்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |