Categories
சினிமா தமிழ் சினிமா

கணவருடன் கயல் ஆனந்தி … திருமணத்திற்குப் பின் எடுத்த முதல் புகைப்படம்…!!!

திருமணத்திற்கு பின் நடிகை கயல் ஆனந்தி தன் கணவருடன் எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நடிகை ஆனந்தி 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ‌ . இதையடுத்து இவர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் ‌. இதன் பின்னர் திரிஷா இல்லனா நயன்தாரா ,எனக்கு இன்னொரு பெயர் இருக்கு ,சண்டி வீரன் ,பரியேறும் பெருமாள் ,விசாரணை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார் ‌. தற்போது நடிகை ஆனந்தி ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார் .

சமீபத்தில் இவர் தெலுங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்ற உதவி இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் 4- வருடமாக காதலித்து வந்த நிலையில் தற்போது பெற்றோர்கள் சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்துள்ளது . இந்நிலையில் திருமணத்திற்குப் பின் முதல் முறையாக தன் கணவருடன் கயல் ஆனந்தி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

Categories

Tech |