Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான்…! புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…! ஆடி போன குடும்பத்தார் …!!

சென்னையில் திருமணமாகி ஒரு மாதமே ஆன புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள புது பெருங்களத்தூர் பாரதி அவன்யூ பகுதியை சேர்ந்தவர் கார் ஓட்டுநர் அரவிந்த் என்பவர். இவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கமலகுமுதவல்லி என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட கமலகுமுதவல்லி மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.

இந்நிலையில் இன்று காலை கமலகுமுதவல்லி அவரது படுக்கை அறை கதவை நீண்ட நேரம் திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த கணவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது தன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் பீர்க்கன்கரணை காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கமலகுமுதவல்லியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆகிய ஒரே மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதால் இச்சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |