கர்நாடக மாநிலத்தில் ஏழை பிராமண அர்ச்சகரை திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு 3 லட்சம் வழங்கப்படும் என அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஏழை பிராமண சமுதாய முன்னேற்றத்திற்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் பிராமணர்கள் மேம்பாட்டு வாரியத்தை கடந்த ஆண்டு உருவாக்கியது. அந்த வாரியம் தற்போது புதிதாக இரண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது. அதற்கான பயணிகள் அளவுகோலாக 8 லட்சம் ரூபாய் மற்றும் 5 ஏக்கர் நிலமும் நிர்ணயிக்கப்பட்டது. அருந்ததி மற்றும் மைத்ரே என்று இந்த திட்டங்களுக்கு பெயர் வைத்துள்ளது.
அதன்படி அருந்ததி திட்டத்தின் கீழ் திருமணமாகும் பிராமணப் பெண்ணின் குடும்பத்திற்கு திருமணத்திற்காக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதனைப் போலவே மற்றொரு திட்டத்தில் பிராமண சமுதாயத்தில் பிராமண சமூகம் மணமகள் அர்ச்சகரை கல்யாணம் செய்து கொண்டால் 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அந்தப் பணம் மூன்று தவணைகளாக அவர்களுக்கு கிடைக்கும். இதனையடுத்து அருந்ததியர் திட்டத்தின்கீழ் 550 குடும்பங்களும், மைத்ரே திட்டத்தின் மூலம் 25 குடும்பங்களும் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறபவர்களுக்கு 5 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலம் இருக்கக் கூடாது. குறிப்பாக ஆயிரம் சதுர அடிக்கு அதிகமான வீடு இருக்கக்கூடாது. அவர்கள் கட்டாயம் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூகமாக இருக்கக் கூடாது. அவர்களின் ஆண்டு வருமானம் எட்டு லட்ச ரூபாய்க்கு அதிகமாக இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.