Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையில் வாங்காத பொங்கல் பரிசுத் தொகுப்பு… வாங்கியதாக வந்த குறுஞ்செய்தி… பொதுமக்கள் சாலை மறியல்…!!

நியாய விலைக்கடையில் வாங்காத பொங்கல் தொகுப்பு வாங்கியதாக குறுஞ்செய்தி வந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அதோடு 2500 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள  நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொராசக்குறிச்சி  கிராமப்பகுதியில் சுமார் 1800 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

இந்நிலையில் அக்கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காமல் பரிசு வழங்கப்பட்டதாக மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நியாய விலை கடை ஊழியர் மீராபாயை  கண்டித்து கள்ளக்குறிச்சி வேப்பூர் சாலை நடுவே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ரிஷிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் தொலைபேசி வாயிலாக கேட்டுக் கொண்டார் . பின்னர்  விரைந்து விசாரணை செய்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக அவர் கிராம மக்களிடம் உறுதியளித்தார். அதன் பேரில்  கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Categories

Tech |