Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை அப்டேட்க்காக காத்திருக்கிறேன்’… ஆட்டோவில் வாசகம் எழுதிய அஜித் ரசிகர்…!!!

வலிமை அப்டேட்காக காத்திருப்பதாக அஜித் ரசிகர் ஒருவர் தன் ஆட்டோவின் பின்னால் வாசகம் எழுதியுள்ளார் .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜீத் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் வலிமை . வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பூஜையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை படத்தின் எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை தவிர இந்த படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைக்கூட படக்குழு தெரிவிக்கவில்லை. தொடந்து சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு வருகின்றனர்.

‘வலிமை அப்டேட்டிற்காக வெயிட்டிங்’ - வைரலாகும் அஜித் ரசிகரின் ஆட்டோ வாசகம்

எந்தவித அப்டேட்டும் தராத இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை கண்டித்து போஸ்டர் ஒட்டிய சம்பவம் நடைபெற்றது. இதையெல்லாம் விட மேலாக கடந்த வாரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்டது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வலிமை அப்டேட்டுக்காக காத்திருப்பதாக அஜித் ரசிகர் ஒருவர் தன் ஆட்டோவின் பின்புறம் வாசகம் எழுதியுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |