Categories
தேசிய செய்திகள்

திருப்பதி மலையில்…. ஏழுமலையானை கும்பிட்டு வந்தபோது…. நடந்த செம ஷாக்…!!

திருப்பதி தேவஸ்தான அறையில் தங்கியிருந்தவர்களின் நகை மற்றும் பணம் திருட்டு போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். எனவே பக்தர்களுக்கு வசதியாக தங்கும் விடுதிகள், உணவகங்கள், அன்னதானம் உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்ய திருப்பதிக்கு  சென்றுள்ளனர்.

அங்குள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் GNC காட்டேஜில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் தங்களது அறையை பூட்டிவிட்டு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளனர். பின்னர் சாமி தரிசனம் முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது அவர்கள் இருந்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அவர்களின் உடைமைகள் சிதறிக் கிடநதுள்ளன. மேலும் அவர்கள் வைத்திருந்த ரூ.2000 மற்றும் மொபைல் போனும் திருடப்பட்டிருந்துள்ளளது.

மேலும் சில நகைகளும் காணாமல் போயிருப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து உடனே திருப்பதி தேவஸ்தான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அறையிலிருந்த கைரேகைகளை சேகரித்துள்ளனர். மேலும் பணம் மற்றும் நகைகளை திருடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |