க்ரைம் த்ரில்லர் படத்தில் கால் டாக்சி டிரைவராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பிசியாக நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது . ‘டிரைவர் ஜமுனா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை வத்திக்குச்சி பட இயக்குனர் கின்ஸ்லின் இயக்குகிறார் . இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருக்கிறார் .
18 ரிலீஸ் நிறுவனத்தின் சார்பாக எஸ்பி சவுத்ரி தயாரிக்கும் இந்தப் படம் மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க உள்ளார். கிரைம் திரில்லர் பாணியில் தயாராகும் இந்த படம் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இந்த படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் மற்ற நடிகர்கள் ,தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் தேர்வு நடைபெற்று வருகிறது.