தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களில் மட்டும் 1500 ரூபாய் வரை குறைந்துள்ளதால் மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தினம்தோறும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் தங்கத்தின் விலையை லண்டன் உலோக சந்தைதான் நிர்ணயம் செய்கிறது. அதாவது, ஹெ.எஸ்.பி.சி, பேங்க் ஆஃப் சைனா உள்ளிட்ட 15 வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுரங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து இதன் விலையை நிர்ணயம் செய்கின்றனர். தங்கத்திற்கான விலை உலக சந்தையில் அதற்கு இருக்கும் மவுசின் அடிப்படையில் தான் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வந்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக மீண்டும் சரிந்து வருகிறது.
இந்த 4 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் ரூ.1,480 வரை குறைந்துள்ளது. கடந்த 6ஆம் தேதி ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.39,080ஆக இருந்தது. இதுவே இன்று ரூ.37,600க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த விலைக் குறைவு மக்களுக்கு சற்று ஆறுதலைத் தந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் கிராம் ரூ.4700க்கும், சவரன் ரூ.37,600க்கும் விற்கப்பட்டு வருகிறது. அதேபோல் வெள்ளி கிராமுக்கு ரு.69ஆகவுள்ளது,