நாம் அன்புடன் முத்தமிடும் போது நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றி ஆய்வு ஒன்று தெளிவாக விளக்கியுள்ளது.
நாம் ஒருவர் மீது வைத்துள்ள காதலை முத்தம் கொடுத்து தான் அதை வெளிப்படுத்துகிறோம். ஆனால் அன்புடன் முத்தமிடும்போது ஆக்சிடோசின், டோபமைன் மற்றும் செரடோனின் ஹார்மோன்களை மூளை சுரக்கிறது. இது மகிழ்ச்சியையும் திருப்தியை உணர்வையும் ஏற்படுத்துகிறது. இதனால் பாசப் பிணைப்பும் வலுவடைகிறது.
அதே சமயத்தில் மன அழுத்தம் குறைகிறது. காதலர்கள் மற்றும் தம்பதியர்கள் இட்டுக் கொள்ளும் போது பாலுணர்வை தூண்டும் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இதனால் தாம்பத்திய இன்பம் அதிகரிப்பதுடன், காதலும் பிணைப்பும் வழிபடுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே முத்தம் கொடுப்பதில் இவ்வாறான பல நன்மைகள் நிறைந்துள்ளன.