பிக் பாஸில் இருந்து இந்த வாரம் சிவானி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது . கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று ஆஜித் வெளியேற்றப்பட்டார் . இதையடுத்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது . இதில் போட்டியாளர்கள் அனைவரும் மிக தீவிரமாக விளையாடி வந்தனர். அதிலும் நேற்று நடைபெற்ற ஒன்பதாவது டாஸ்க் போட்டியாளர்களுக்கு மிகக் கடினமான ஒன்றாக இருந்தது. இந்தப் போட்டியில் அனைவரும் தோற்று விட இறுதியில் ரம்யா மற்றும் சிவானி போராடி வந்தனர். ‘சிங்கப் பெண்ணே’ பாடலைப் போட்டு விட்டு பிக்பாஸும் அவர்களை ஊக்கப்படுத்தினார்.
கடைசியில் சிவானி அந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றார் . இதையடுத்து டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் சோம் சேகர் வெற்றி பெற்றுள்ளதாக இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சிவானி பிக்பாஸில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது சிவானியின் அம்மா அவரை மிக கடுமையாக கண்டித்து விட்டு சென்றார் . தற்போது முழு மூச்சாக போட்டியில் கவனம் செலுத்த ஆரம்பித்த சிவானி இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் சற்று ஷாக்காகி உள்ளனர்.