Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எந்த ஆவணமும் தேவையில்லை….. “எல்லோருக்கும் கடன்” ரூ1,15,00,000 மோசடி….. விசாரணையில் வெளியான பகிர் உண்மை….!!

வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடாக ரூபாய் 1 கோடியே 15 லட்சம் கொடுத்து மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்தின் தலைவராக மயிலாடியில் வசித்து வந்த சாய் ராம் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் பணிபுரிந்தார். அப்போது முத்தையா என்பவர் சங்க செயலாளராக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் பணியாற்றியபோது அந்தக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூபாய் 1 கோடியே 15 லட்சம் கடன் தொகையை 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாத நபர்களுக்கும் அதாவது தங்க நகை, வீட்டு பத்திரம் உள்ளிட்ட சொத்துக்களின் அடிப்படையில் அளிக்காமலும், தனி மனிதனின் சம்பள அடிப்படையில் கூட கடன் தொகை நிர்ணயம் செய்யாமல் தகுதியற்ற பயனாளிகளுக்கும் கடன் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இச்சம்பவம் குறித்து நெல்லை மாவட்டம் வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசாரிடம், குமரி மாவட்ட கூட்டுறவு துறை துணைப் பதிவாளர் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து வணிக குற்றப்புலனாய்வு பிரிவு துணை சூப்பிரண்டு ஜாகிர் உசேன் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டதை அடுத்து, இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா தலைமையில் போலீசார் வழக்கு பதிந்து மேற்கொண்ட விசாரணையில் ரூபாய் 1 கோடியே 15 லட்சம் பணத்தை முறைகேடாக கூட்டுறவு கடன் சங்கத்திலிருந்து தகுதியற்ற பயனாளிகளுக்கு வழங்கி மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் அஞ்சுகிராமத்தில் வசித்து வரும் கௌசல்யா என்பவர் இதற்கு புரோக்கராக செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பெண் புரோக்கர் கௌசல்யா, சங்க செயலாளர் முத்தையா போன்றோரை குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் குமரி மாவட்டத்தில் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சங்க தலைவர் சாய்ராம் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இவர் திமுக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |