பிறப்பு வீதத்தை அதிகரிக்க 3 குழந்தை பெற்றால் 7 லட்சம் பரிசு என்று ஒரு நாடு அறிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாறிவரும் நவீன காலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக பல நாடுகளும் குழந்தை பெற்றுக் கொள்வதை குறைக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர. இந்நிலையில் குழந்தை பெற்றால் 7 லட்ச ரூபாய் பரிசு என்று அறிவித்து இருக்கும் நாடு குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆமாம். தென் கொரியா நாட்டில் உள்ள சவுத் ஜியோன்சாங் மாகாணத்தின் தலைநகரான சேங்வானில் இறப்பு வீதத்தைக் காட்டிலும் பிறப்பு வீதம் குறைந்து வருவதாக சமீபத்திய புள்ளி விவரத்தின் படி தெரியவந்துள்ளது. கடந்த 2020ஆம் வருடத்தில் 2,75,815 பிறப்புகளும், 3,07,764 இறப்புகளும் பதிவாகியிருக்கிறது.
இந்நிலையில் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு ஏழு லட்சம்(இந்திய மதிப்பில் ) வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. புதிதாக திருமணம் செய்த தம்பதிகளுக்கு 92 ஆயிரம் அமெரிக்க டாலர் கடனாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறாக கடன் வாங்கும் தம்பதிகள் முதல் குழந்தை பெற்றுக் கொள்ளும் சமயத்தில் கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்றும், 2 வது குழந்தை பெற்றுக் கொள்ளும் சமயத்தில் 30% தள்ளுபடி செய்யப்படும் என்றும், 3 வது குழந்தை பெற்றெடுக்கும் சமயத்தில் முழு தொகையும் தள்ளுபடி செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.