Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் கிட்ட போனில் பேசுவேன் – மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே…!!

அதிபர் ட்ரம்பிடம் போனில் பேச போவதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ட்ரம்ப் தோல்வியடைந்தார். இதையடுத்து ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தார். இதையடுத்து பைடனின் வெற்றிக்கு எதிரான அவருடைய வழக்குகள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்க நாடாளுமன்றம் கூடியபோது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் உள்ளே நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அந்த வன்முறைக்கு காரணம் ட்ரம்ப் என்பதால், ட்ரம்பின் ட்விட்டர் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வரக்கூடிய தினங்களில் இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெறும் என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, “அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. இந்த நிகழ்வு குடியரசு கட்சிக்கு மட்டுமல்ல அமெரிக்க ஜனநாயகத்திற்கும் அவமானம். மேலும் நான் ட்ரம்மிடம் போனில் பேசுவேன்” என்று கொஊறியுள்ளார்.

Categories

Tech |