கங்கை ஆற்றில் டால்பின் உயிரினத்தை துடிக்கத்துடிக்க சிலர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக டால்பின்கள் கடலிலும், ஆறுகளிலும் வாழக்கூடியவை. பெரும்பாலும் கடலிலேயே அவை வாழ்ந்து வருகின்றது. ஆறுகளில் வாழும் டால்பின்கள் மிகவும் அரிய வகை. அப்படி உத்தர பிரதேச மாநிலம், பிரதாப்கர் பகுதியை சேர்ந்த கங்கை நதியில் டால்பின் உற்சாகமாக வலம் வந்தது. அப்போது அங்கு இருந்த மனிதர்கள் அது பெரிய வகை சுறா என நினைத்து அதனை கோடாரியால் பயங்கரமாக தாக்கியுள்ளனர். பின்னர் அது டால்ஃபின் என தெரியவந்தது. டால்ஃபின் துடிக்கத்துடிக்க உயிரிழந்தது. அதன் ரத்தம் கங்கையாறு முழுவதும் பரவியது.
அவர்கள் டால்பினை அடித்துக் கொலை செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இதையடுத்து அவற்றின் ஐபி அட்ரஸ் வைத்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களை கைது செய்தனர். கடல் வாழ் உயிரினங்களில் நண்பனாக திகழ்வது டால்பின் மட்டும். அவற்றை கொலை செய்வது கொடூர செயல். இவ்வாறு கொலை செய்தவர்களை உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.