Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தமிழக அரசின் திடீர் உத்தரவு…! வெளியாகுமா மாஸ்டர் ? பரபரப்பு தகவல் …!!

திரையரங்கில் 100% இருக்கை உத்தரவை ரத்து செய்த தமிழக அரசு 50% இருக்கையுடன் திரையரங்கு செயல்பட அனுமதி வழங்கியுள்ளது.

திரையரங்குகளில் 100% இருக்கைகள் அனுமதி ரத்து செய்யப்பட்டாலும் கூட தயாரிப்பாளர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை உறுதியாக இருக்கிறார்கள். குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர், ஈஸ்வரன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகிறது. இந்த திரைப்படங்களுக்கான திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணி ஆனது தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணியில் இருக்கிறார்கள். இரண்டு தயாரிப்பு நிறுவனம் இது குறித்துச் சொல்லும்போது, 50 சதவீதமாக பார்வையாளர்களை குறைந்தாலும் கூட தங்களுடைய திரைப் படங்களை வெளியிடுவதில் உறுதியாக இருக்கின்றோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இதன் காரணமாகத்தான் மாஸ்டர் திரைப்படமானது 850 திரையரங்குகளிலும், ஈஸ்வரன் திரைப்படமானது 250 திரையரங்குகளிலும் வெளியிடுவதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சற்று முன்பு தான் திரையரங்கில் 100% இருக்கைக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசு அதனை ரத்து செய்து, 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |