சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, பெரவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜவகர் நகரில் வசித்து வருபவர் வசந்தகுமார். இவர் அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வசந்தகுமார் தனது கிரெடிட் கார்டு மற்றும் பர்சனல் லோன் மூலம் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையை இழந்ததால் மிகுந்த சிரமத்துடன் இருந்து வந்துள்ளார்.
அப்போது வசந்தகுமார் தவணை தொகையை சரியாக கட்டவில்லை என்பதால் அதனை திருப்பிக் கொடுக்க கோரி வங்கி ஏஜெண்டுகள் அவரை பணம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான வசந்தகுமார் வீட்டில் சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.