மகரம் ராசி அன்பர்களே…! எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் மனதில் ஓடும்.
முக்கியமான செயலை செய்வதற்கு ஏற்ற நாள். பிரச்சனைகளை எளிதாக மேற்கொள்வீர்கள். எதையும் சுமுகமாக கையாளுவீர்கள். உங்களின் துணையுடன் நட்பான முறையில் நடந்து கொள்வீர்கள். இதனால் உறவின் இணைப்பு வலுப்படும்.உங்களின் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது திடமாக இருக்கும். வரவும் செலவும் இரண்டும் கலந்தே இருக்கும். கையிருப்பு பணம் இருக்கும். உங்களின் வங்கி இருப்பு அதிகரிக்கும். உங்களின் ஆரோக்கியம் சிறந்த முறையில் இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.மாணவ மாணவிகளுக்கு படிப்பின் முன்னேற்றமான நிலையிருக்கும். முயற்சி செய்தால் நல்ல பலனைப் பெறுவீர்கள். சிவவழிபாடு மேற்கொண்டால் நல்ல பலனை பெறுவீர்கள். உங்களின் அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 7. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.