தனுசு ராசி அன்பர்களே…! இன்று ஒரு முறைக்கு இருமுறை எதிலும் யோசித்து செயல்பட வேண்டும்.
உங்களின் வார்த்தைகளில் கவனம் வேண்டும். மனதில் குழப்பம் வேண்டாம். பிரார்த்தனை மூலம் வெற்றி கிடைக்கும். பணியில் வெற்றி காண்பது அரிது. பணியை குறித்த நேரத்தில் முடிக்க திட்டமிடுதல் அவசியம் ஆகும். உறவில் நல்லிணக்கம் பாதிக்கப்படும். உங்களின் துணையுடன் சூடான விவாதம் செய்ய நேரிடும். செலவுகளை கட்டுப்படுத்த முடியாது.தனுசு ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது உங்களின் ஆரோக்கியம் சீராக இருக்காது. கண் வலி காணப்படும். ஆரோக்கியமான உணவு உங்களை திடமாக வைத்திருக்கும். மாணவ மாணவிகளுக்கு கேளிக்கையில் ஈடுபட மனம் தூண்டும். கெட்ட சவகாசம் தவிர்த்துவிடுவது நல்லது. இன்று நீங்கள் பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. உங்களின் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 5. அதிர்ஷ்டமான நிறம் ஊதா நிறம்.