Categories
மாநில செய்திகள்

“100% இருக்கை நல்லதல்ல”… தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுரை…!!!

தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் போது திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிப்பது நல்லது அல்ல என சென்னை ஐகோர்ட் அறிவுரை கூறியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கடந்த மாதம் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் திரைக்கு வர இருப்பதால், திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்படுவதற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும்போது திரையரங்குகளில் 100% ரசிகர்களுக்கு அனுமதி அளிப்பது நல்லதல்ல என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுரை செய்துள்ளது. கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் வரை தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்றும், திரையரங்குகள் விவகாரத்தில் குழந்தைகள் போல அரசு மெல்ல அடியெடுத்து வைக்கவும் தெரிவித்துள்ளது. மேலும் ஐகோர்ட்டில் உள்ள வழக்கையும் மதுரை ஐகோர்ட்டு கிளை விசாரிக்கும் என்றும், ஜனவரி 11 வரை 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படவும் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |