Categories
தேனி மாவட்ட செய்திகள்

நீட் பொதுத்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு….. முக்கிய ஏஜென்ட் நீதிமன்றத்தில் சரண்…!!

நீட் பொதுத்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் முக்கிய ஏஜென்ட் தேனி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீட் பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த டாக்டர் வெங்கடேசன் என்பவரின் மகன் உதித் சூர்யா தேனியில் உள்ள மருத்துவ கல்லூரியில் சேர்ந்திருந்தார். இந்த வழக்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தமிழகம் முழுவதும் நீட் பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் என 10 மாணவ மாணவிகளை போலீசார் அவர்கள் பெற்றோர்களுடன் கைது செய்தனர்.

விசாரணையில் இவர்கள் அனைவரும் நீட் பொதுத் தேர்விற்காக தனியார் பயிற்சி மையங்களில் பயின்றவர்கள் எனவும் அதன் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் எனவும் ஏஜெண்டுகள் மூலமாக பல லட்சம் ரூபாய் பணம் கொடுத்து இந்த மாணவர்களுக்கு பதிலாக வேறு நபர்களை வைத்து தேர்வு எழுதியதும் கண்டுபிடிக்கப்பட்டது. தேனியில் சிபிசிஐடி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தியபோது ஏஜென்டாக இருந்த ரஷீது என்பவரை தேடினர்.

இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவர் தற்போது தேனி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இதை தொடர்ந்து 15 நாட்கள் அவரை சிறையில் அடைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் ரசீதை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தவுள்ளனர். நீட் பொதுத்தேர்வில் இதுவரை எத்தனை ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளன என்பதை விசாரித்து வருகின்றனர். நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த இந்த வழக்கில் முக்கிய ஏஜென்ட் ரஷீத் சரணடைந்து உள்ளது இவ்வழக்கை மீண்டும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

Categories

Tech |