Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் நடந்த உயிரிழப்பு ..! அமைதி காத்த நிர்வாகம்…. உறவினர்கள் ஆவேசம் …!!

புதுச்சேரியில் மருத்துவமனை மாடியிலிருந்து நோயாளி கீழே விழுந்து உயிரிழந்தது பற்றி மருத்துவமனை நிர்வாகம் பதில் அளிக்காததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் உள்ள கணபதிசெட்டிகுளம் தனியார் மருத்துவமனையில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ருத்ர குமார் என்பவர் உடல் நலக்குறைவால் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார்.அவர் திடீரென மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதை அறிந்த உறவினர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். உறவினர்கள் ருத்ரகுமார் எப்படி கீழே விழுந்தார் என்று குழப்பத்தில் இருந்தனர்.

அதனால் மருத்துவமனையில் உள்ள அலுவலர்களிடம் கேட்டபோது அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50 பேர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். காரணம் தெரியாமல் நோயாளி மருத்துவமனை நான்காம் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |