நம் அன்றாட வாழ்க்கையில் சிறுதானிய உணவான வெள்ளை சோளத்தை சேர்த்து கொண்டால் ஆயுள் அதிகரிக்கும்.
நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை நமது உடலுக்கு நல்லது தரக்கூடியதாக இருக்க வேண்டும். நம் முன்னோர்களின் காலத்தில் சிறுதானிய உணவுகள் அவர்களுக்கு மிகுந்த உடல் ஆரோக்கியத்தை கொடுத்தன. அதனால் பெரும்பாலும் நம் முன்னோர்கள் சாப்பிட்ட உணவுகளில் சிறுதானிய உணவுகளை உள்ளன. அவ்வாறு உடலுக்கு நன்மை தரக்கூடிய உணவுகளில் சிறுதானிய உணவுகள் மிகவும் சிறந்தது.
அவ்வாறு சிறுதானிய உணவான வெள்ளை சோளத்தில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பது பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். வெள்ளை சோளத்தில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அது இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. மேலும் மாரடைப்பு ஆபத்தில் இருந்து பாதுகாக்கிறது. சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் பெறலாம். இதில் நோயை எதிர்த்துப் போராடும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக இருப்பதால் வயிற்று வலி மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் இது ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கும்.