‘கேஜிஎப் 2’ படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்த திரைப்படம் கே ஜி எஃப் . கன்னடத்தில் உருவான இந்த படம் தமிழ், மலையாளம் ,ஹிந்தி ,தெலுங்கு என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது . அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது மிக பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது . ஒட்டுமொத்த இந்தியாவும் இந்த படத்தின் ரிலீசை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.
Was waiting for this powerful teaser 🔥🔥🔥🔥🔥 now waiting to watch this film in theatres👍 Best wishes to @TheNameIsYash Dir @prashanth_neel @duttsanjay sir @TandonRaveena mam @anbariv @BasrurRavi @hombalefilms @SrinidhiShetty7 and entire #KGF2 team for a Massive success 👍💪 https://t.co/qp9MLcAnCH
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 7, 2021
தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமல்ல பல திரையுலக பிரபலங்களும் பார்க்க ஆவலோடு இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘கேஜிஎப் 2’ டீஸர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இந்த டீசரை பார்க்க மிக ஆவலாக இருந்தேன் . இந்த படத்தை திரையரங்குகளில் காண காத்திருக்கிறேன் . இந்த படம் மிகப்பெரிய வெற்றியை அடைய படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ‘என பதிவிட்டுள்ளார் .