நாகை அருகே கட்டிட கூலி தொழிலாளியாக இருந்து வரும் கணவனை இழந்த பெண் தனது சகோதரி வீட்டிற்கு தினந்தோறும் சென்று அங்கு பாதுகாப்பாக இரவு நேரங்களில் மட்டும் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல சகோதரி வீட்டுக்கு வந்த அந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பெண்ணின் வாய்பொத்தி அங்குள்ள ஆலயத்தின் அழைத்துச் சென்று அவரை துன்புறுத்தி பாலியல் வன்கொடுமையின் ஈடுபட்டுள்ளார்கள்.
இரவு 11 மணிக்குப் பிறகு அழைத்து சென்றவர் நீண்ட நேரமாகியும் பெண்ணை விடாமல் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடுபட்டுத்தியதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து வெளிப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்கள் அந்தப் பெண்ணின் சகோதரன் வீட்டிற்கு சென்று சகோதரியின் கணவரை தாக்கியதோடு இதுகுறித்து காவல் நிலையத்திலோ… வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.