பிரபல கால்பந்து வீரர் அலெக்ஸ் அபோலினாரியோ மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலை சேர்ந்த கால்பந்து வீரர் அலெக்ஸ் அபோலினாரியோ(24). இவர் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும், மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 24 வயது மட்டுமே ஆகிறது. இந்நிலையில் கால்பந்து வீரர் அலெக்ஸ் சிறு வயதிலேயே திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.